சவூதி அரேபிய இராச்சியம் இலங்கை மக்களிடையே விநியோகிக்க 50 டொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கஹில்ட் ஹம்மூத் அலி கட்டானி சமய மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் குறித்த பேரித்தம் பழக் கையிருப்பை கையளித்தார்.
சவூதி அரேபியாவின் மன்னர் சல்மானின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையங்கள் உலகெங்கிலும் உள்ள பல நட்பு நாடுகளுக்கு பேரிச்சம் பழங்களை நன்கொடையாக வழங்கி வருகின்றன.