மக்கள்தொகை மற்றும் புவியியல் இருப்பிடத்திற்கு ஏற்ப எல்லை நிர்ணயம் மீண்டும் மாற்றப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பில் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.