பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களும் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் வரும் அபாயம் இருப்பதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை விரைவாக நடத்தி அந்த சபைகளை மக்கள் பிரதிநிதித்துவ சபைகளாக மாற்றும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என அதன் பிரதம சட்டத்தரணி டி.எம்.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் போகும் அபாயம் இருப்பதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.