Homeஉள்ளூர்லொறி மோதி பெண் உயிரிழப்பு ; ஒருவர் காயம் ; சாரதி கைது

லொறி மோதி பெண் உயிரிழப்பு ; ஒருவர் காயம் ; சாரதி கைது

கந்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேரலந்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (25) காலை இடம்பெற்றுள்ளது.

ராகமவிலிருந்து கந்தானை  நோக்கிப் பயணித்த லொறி ஒன்று  வீதியில் பயணித்த இரண்டு பெண்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பெண்களும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரக்வானை பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து 35 வயதுடைய லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular