நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்தில் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கும் இருபது 20 குழாத்தில் குசல் ஜனித் பெரேராவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள 50 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னோடியாக தகுதிகாண் சுற்றில் விளையாடவுள்ள இலங்கை அணியின் மத்திய வரிசை துடுபாட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் ஏஞ்சலோ மெத்யூஸை இலங்கை குழாத்தில் அணி தெரிவாளர்கள் இணைத்துக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, குசல் ஜனித் பேரேராவுக்கு இருபது 20 கிரிக்கெட் குழாத்தில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அறிமுக வீரராக லசித் குரூஸ்புள்ளேயும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிராக சர்வதேச ஒருநாள் மற்றம் சர்வதேச இருபது 20 ஆகிய இருவகை கிரிக்கெட் தொடர்களில் தலா 3 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணியின் தலைவராக மீண்டும் தசுன் ஷானக்க செயற்படவுள்ளார்.
இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கான இலங்கை குழாம்
தசுன் ஷானக்க (தலைவர்)
குசல் மெண்டிஸ் (உதவி அணித் தலைவர் – ஒருநாள் அணி)
வணிந்து ஹசரங்க டி சில்வா (உதவி அணித் தலைவர் – இ20 அணி)
ஏஞ்லோ மெத்யூஸ் (ஒரு நாள் அணியில் மாத்திரம்)
குசல் ஜனித் பெரேரா (இருபது 20 அணியில் மாத்திரம்)
பெத்தும் நிஸ்ஸன்க
நுவனிது பெர்னாண்டோ
சரித் அசலன்க
சதீர சமரவிக்ரம
தனஞ்சய டி சில்வா
சஹான் ஆராச்சிகே (ஒருநாள் அணியில் மாத்திரம்)
துனித் வெல்லாலகே
மஹீஷ் தீக்ஷன
கசுன் ராஜித்த
லஹிரு குமார
ப்ரமோத் மதுஷான்
டில்ஷான் மதுஷன்க
சாமிக்க கருணாரட்ன
மதீஷ பத்திரண
லசித் குரூஸ்புள்ளே (இருபது 20 அணியில் மாத்திரம்).