Homeஉள்ளூர்மின்னேரியாவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மின்னேரியாவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

அநுராதபுரம், மின்னேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிக்கவெவ பிரதேசத்தில்  உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னேரியா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  நிக்கவெவ பிரதேசத்தில்  வசிக்கும் 41 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular