கார் ஒன்று மோதியதால் தடைப்பட்டிருந்த கொக்கலயிலிருந்து ஹபராதுவ வரையான கரையோர வீதியின் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணிக்க முற்பட்ட கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.