வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சதொச அதிகாரிகள் நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நால்வரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தள நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொள்வனவு தொடர்பான உதவி மேலாளர், சிரேஷ்ட விநியோக முகாமையாளர், விநியோக முகாமையாளர் மற்றும் வெலிசர மொத்த விற்பனை முகாமையாளர் ஆகியோரே இவ்வாறு நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.