ஜனவரி 2022 மற்றும் ஜனவரி 2023 க்கு இடையில் எரிபொருள் பாவனையில் ஏற்பட்ட அதிக வீழ்ச்சியானது கடுமையான பொருளாதாரச் சுருக்கத்தை பிரதிபலிக்கிறது என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்திருந்தார்.
இதனால், தேசிய எரிபொருள் உரிமத்தின் மூலம் வழங்கப்படும் எரிபொருளை ரேஷன் முறையிலும் மக்கள் வாங்க முடியாத நிலையில், இனியும் எரிபொருள் உரிம முறையை அமுல்படுத்துவது வீண் என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35%, மண்ணெண்ணெய் பயன்பாடு 75% குறைந்துள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.