23-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடத்தப்படுகின்றது.
2026-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த உலக கிண்ண போட்டியில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த உலக கிண்ணத்தை விட 16 நாடுகள் கூடுதலாக பங்கேற்கின்றன.
மொத்தம் 104 ஆட்டங்கள் நடைபெறும். கத்தார் உலகக்கிண்ணத்தை விட 40 போட்டிகள் கூடுதலாகும். கடந்த உலக கிண்ணத்தில் மொத்தம் 64 ஆட்டங்கள் நடத்தப்பட்டது.
கடைசியாக உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்றது கத்தாரில் நடந்த 22-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜெண்டினா சாம்பியன் பட்டம் பெற்றது.