ரயில் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (15) பிற்பகல் 9 புகையிரதங்கள் மாத்திரம் இயங்கும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.
இதன்படி, பிரதான மற்றும் வடக்கு வழித்தடங்களில் 4 புகையிரதங்களும், கரையோர மற்றும் புத்தளம் மார்க்கத்தில் தலா 2 புகையிரதங்களும், களனிவெளி பாதையில் ஒரு புகையிரதமும் சேவையில் ஈடுபடவுள்ளதாக பிரதிப் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
மாலை 5.00 மணிக்கு சாகரிகா கடுகதி ரயில் மருதானையில் இருந்து பெலியத்த வரை கரையோரப் பாதையிலும் மாலை 5.25 மணிக்கும் காலி வரையிலும், புத்தளம் மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் வரை மாலை 4.30 மற்றும் 5.30 க்கும், களனிவெளி மார்க்கத்தில் அவிசாவளைக்கு மாலை 5.00 மணிக்கும் இயக்கப்படும்.