பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இம்ரான் கானின் வக்கீல் கவாஜா ஹரிஸ் மற்றும் அவரது குழுவினர் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமருக்கு விதிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்தக் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த இடைநீக்கம் குறித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதேபோன்ற மனுவை லாஹூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக பிடிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
70 வயதான இம்ரான் கான், தான் பிரதமராக இருந்த காலத்தில் பெற்ற பரிசுகள் அல்லது அவற்றை விற்றதன் மூலம் கிடைத்த இலாபம் ஆகியவற்றை அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற நீதிபதியை அச்சுறுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக அவர் கைது செய்யப்பட இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.