இன்று (15) நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை “சட்டப்படி வேலை” தொழில் நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்தா அவர்கள் தெரிவித்திருந்தார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இலங்கையில் இருந்து புறப்படும் மற்றும் வருவதற்கு விமானங்கள் தாமதமாகலாம் என இந்த தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை வான்பரப்பிற்கு மேலே பயணிக்கும் விமானங்கள், அவசர தேவைகள் கொண்ட விமானங்கள், மருத்துவ உதவிகளை ஏற்றிச்செல்லும் விமானங்கள் மற்றும் நோயாளிகள் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் விமானங்களுக்கு இந்த தொழில்சார் நடவடிக்கை தடைகளை ஏற்படுத்தாது என திசர அமரானந்தா வலியுறுத்தினார்.