உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதியமைச்சகத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் தொடர்ந்தும் காலதாமதம் செய்து வருவதால் ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவதும் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
புதன்கிழமை (15) 500 மில்லியன் ரூபா பெறப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தும் அரசியல் சாசனப் பொறுப்பைக் கொண்ட அமைப்பு என்ற வகையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பணத்தினை விடுவிப்பது தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் முன்வைக்க தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (13) அல்லது நாளை (14) கூடி எதிர்கால வேலைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.