இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் அரச ஊழியர்களுக்கு கூடுதல் கொடுப்பனவு வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி பொருளாதார நிலைமையை மதிப்பிட்டு இந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வார இதழ் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடைமுறைப்படுத்தப்படும் மறுசீரமைப்பு திட்டங்களால் பொருளாதாரம் மேம்படும் என அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாகவும், எதிர்ப்புகள் வந்தாலும் வரிக் கொள்கை அப்படியே இருக்கும் என்றும், எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்றும் அவர் கூறுகிறார்.