2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச உத்தியோகத்தர்களுக்கு மார்ச் 09ஆம் திகதியிலிருந்து தேர்தல் தாமதமாகும்போது உரிய அதிகாரியின் அடிப்படைச் சம்பளத்தை மாத்திரம் வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்து அரச நிர்வாகச் செயலாளருக்கு அறிவித்துள்ளது.
மேற்படி பரிந்துரை தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிர்வாக செயலாளருக்கு உரிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.