அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தையடுத்து, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முதல் தொகை அரிசி நாளை (12) காலை இலங்கை வந்தடையவுள்ளது.
இவ்வாறு 5,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த அரிசி இறக்குமதியின் பின்னர் சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.