டிசம்பரில் நடைபெறவுள்ள 2021 லங்கா ப்ரீமியர் லீக் (LPL) போட்டிகளில் பங்கேற்பதற்காகப் பெருமளவான வெளிநாட்டு வீரர்கள் இணையத்தளம் ஊடாக விண்ணபித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
லங்கா ப்ரீமியர் போட்டிகளுக்காக வெளிநாட்டு வீரர்களைப் பதிவுசெய்யும் செயற்பாடுகள் கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி முதல் ஆரம்பமாகியிருந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதியுடன் நிறைவடைந்தன.
2021 லங்கா ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் டிசம்பர் 5 ஆம்திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக 699 வெளிநாட்டு வீரர்கள் விண்ணப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் மேலும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இவர்களில் 225 கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் பரிந்துரை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா ப்ரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்கும் அணியொன்றில் ஆகக்கூடியது 6 வெளிநாட்டு வீரர்களை மாத்திரமே இணைத்துக்கொள்ள முடியும்.
இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் கிரிக்கெட் வீரர்களுக்கான ஏலத்தில் 5 அணிகளின் உரிமையாளர்களால் 30 பேர் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்கான விண்ணப்பித்துள்ள பிரபல கிரிக்கெட் வீரர்களின் விபரங்கள் வருமாறு
மேற்கிந்திய தீவுகள் – ட்வைன் ஸ்மித், தினேஸ் ரம்தின், ரொஸ்டன் சேஸ், ஜோன்சன் சார்ள்ஸ், கெமா ரோச், ஷாய் ஹோப், கிரன் பவெல், ரபீம் கொன்வெல், பிடெல் எட்வர்ட், ஷெல்டன் கோட்ரல், பெபியன் அலன், செட்விக் வோல்டன், அண்ட்ரே ரஸல், லெண்ட்ல் சீமென்ஸ், ஜெரம் டெய்லர், காலோஸ் ப்ராத்வெய்ட், ஷிம்ரன் ஹெட்மயர், அல்சாரி ஜோசப்
சிம்பாப்வே – சிகந்தர் ராஸா, க்ரேன் அர்வின், ஷோன் வில்லியம்ஸ்
பங்களாதேஸ் – சொஹாப் காஸி, ஷஃபியுல் ஸ்லாம், அபீப் ஹுசைன், மெஹெதி ஹசன், மொஹமட் இர்ஃபான், இம்ருல் கேஸ், டஸ்கின் அஹமட், மஹமுதுல்லா ரிஷாத்
பாகிஸ்தான் – அன்வர் அலி, மொஹமட் ஹஃபீஸ், ஃபகார் சமான், மொஹமட் இர்ஃபான், அஹமட் ஷேசாட், சொஹைல் தன்வீர், இமாம் உல் ஹக், உமர் அக்மல், கம்ரன் அக்மல், சஃப்ராஸ் அஹமட், ஜுனைட் கான், உஸ்மான் ஷின்வாரி, ஹெரிஸ் சொஹெல், ஷஹீட் அப்ரிடி, சொய்ப் மலிக், மொஹமட் அமீர், ஹசன் அலி, வஹாப் ரியாஸ்
தென் ஆபிரிக்கா – பியோன் போஃர்டென், ரிசர்ட் லேவி, வேன் பாதொல், ட்வேன் ஒலிவர், இம்ரான் தாஹிர், பஃப் டூ ப்ளசிஸ், ராஸி வெண் டெர் டுஸ்சன், மோர்னி மோகல்
இந்தியா – யூசுப் பதான், இர்ஃபான் பதான், வினய்குமார்
அவுஸ்திரேலியா – ஜேம்ஸ் போஃல்க்னர், க்றீஸ் லின்
இங்கிலாந்து – லோரி எவன்ஸ், லுக் ரைட், லியம் பள்ன்கட், டேன் லோரன்ஸ், சமித் படெல், ஸ்டீப் ஃபின், டேவிட் மாலன், ஆதில் ரஷீட், சேம் பிலிங்ஸ், ஒலீ ரொபின்சன், ரவி பொபாரா
நியூஸிலாந்து – மிச்செல் மெக்லென்ஹம், நீல் ப்ரூம்