பங்களாதேஷ் டாக்காவில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மக்கள் செறிந்து வாழும் பகுதிக்கு அருகாமையில் உள்ள 07 மாடிக் கட்டிடத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு மாடிகளும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெடித்ததை அடுத்து 200 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 11 தீயணைப்பு பிரிவுகள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏழு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதோடு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.