நாட்டை அராஜகம் இன்றி ஒரு வருடத்திற்கு சுதந்திரமாக சுவாசிக்க விடுமாறு அனைத்து அரசியல் தரப்பினருக்கும் கோரிக்கை விடுப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
“உங்கள் போராட்டத்தை செய்யுங்கள். ஆனால் வளர்ச்சிக்கான பாதையை அடைத்தால், நாடு அராஜகமாவதைத் தடுக்க முடியாது” என்றார்.
கொவிட் தொற்று பரவி மூன்று வருடங்களின் பின்னர் இலங்கை வந்துள்ள சீன சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற முதலாவது இலங்கை விமானத்தை வரவேற்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அந்த விமானம் மூலம் நூற்றி இருபது சீன சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வந்தனர்.
அதிக எண்ணிக்கையிலான சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது பெரும் முன்னேற்றமாகும். எதிர்காலத்தில் 500,000 சீன சுற்றுலாப் பயணிகள் வந்தால், பெறப்பட்ட தொகை சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொகைக்கு சமம் என தெரிவிக்கப்படுகின்றது.