நெல் உற்பத்திக்கு விதிக்கப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை நீக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விவசாய பயிர்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வரி நீக்கத்தின் பலனை விவசாயிகள் அனுபவிக்க முடியும் என தான் நம்புவதாக தெரிவித்திருந்தார்.
வரி நீக்கப்பட்டதன் மூலம் ஆலை உரிமையாளர்கள் அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நெல் உற்பத்தியில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் 2.5% சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியாக வசூலிக்கப்பட்டது.