follow the truth

follow the truth

January, 7, 2025
Homeவிளையாட்டுஇலங்கை அணி நியூசிலாந்து நோக்கி பயணம்

இலங்கை அணி நியூசிலாந்து நோக்கி பயணம்

Published on

இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை நியூசிலாந்து நோக்கி புறப்பட்டது.

இலங்கை அணியானது 02 டெஸ்ட் போட்டிகள், 03 ஒருநாள் போட்டிகள் மற்றும் 03 இருபதுக்கு 20 போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் இரு நாடுகளுக்குமிடையில் நடைபெறவுள்ள 02 டெஸ்ட் போட்டிகள் உலக சம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் கீழ் நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகளாக ஒரு நாள் தொடர் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் வழமை போன்று இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்னவும், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணிகளுக்கு தசுன் ஷானகவும் தலைமை தாங்கியுள்ளார்.

17 வீரர்களும் 12 அதிகாரிகளும் இன்று காலை நியூசிலாந்து நோக்கிச் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பெட் கம்மின்ஸ் விளையாடுவதில் சந்தேகம்

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் தவரவிடக்கூடும் என கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அணித்தலைவராக பதவியேற்று...

டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது குறித்து கலந்துரையாடல்

டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது குறித்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆகியவற்றின் தலைவர்கள்...

நியூசிலாந்து அணிக்கு இலகு வெற்றி

சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் போட்டியை நடத்தும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து...