follow the truth

follow the truth

January, 18, 2025
HomeTOP2இந்திய முட்டைகளை 30 ரூபாய்க்கு வழங்க தீர்மானம்

இந்திய முட்டைகளை 30 ரூபாய்க்கு வழங்க தீர்மானம்

Published on

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகள் அடங்கிய கப்பல் இன்று(26) நாட்டை வந்தடையவுள்ளது.

முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி உற்பத்திகளுக்கு மாத்திரம் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபா படி உணவகங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பாவனைக்கு உட்படுத்துவதற்கான வழிகாட்டல்களைத் தயாரிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, பேக்கரி உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் முட்டையை பாவனைக்கு உட்படுத்தும் போது கையுறை பாவிக்க வேண்டும் எனவும் முட்டை ஓடுகளை பாதுகாப்பாக அகற்ற அல்லது அழிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வௌிநாடுகள் சிலவற்றில் பரவியுள்ள பறவைக் காய்ச்சல் நாட்டிற்குள் வருவதைத் தடுக்கும் நோக்கில் இந்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீனாவுக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று(17) நாடு...

கோட்டாபயயிடம் 03 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் 03 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கதிர்காமம் பகுதியிலுள்ள காணி...

ஆசன முன்பதிவு மற்றும் முன்பதிவுக் கட்டண மீளளிப்பு தொடர்பான அறிவித்தல்

புகையிரத ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணைக் குறிப்பிட...