தேர்தலை நடத்துவது தற்போதைய ஜனாதிபதியின் கடமை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
“..எவ்வாறாயினும், அரசிடம் நிதி இல்லாவிட்டால் தேர்தலையும் நடத்த முடியாது. எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தமது கட்சி தயாராக உள்ளது. தான் வெற்றி பெறுவேன் என்று தனக்குத் தெரியும் என்பதால் தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஒரு தேர்தலையும் தாமதப்படுத்தவில்லை. தற்போதைய அரசாங்கம் வெற்றி பெறுமா இல்லையா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதால் தேர்தலும் நிச்சயமற்றதாக உள்ளது. தேர்தல் வரும்போது மக்களின் நாடித்துடிப்பை புரிந்து கொள்ள முடியும்..” என தெரிவித்திருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி குறித்து கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் நிதியை பாதுகாக்க முடியும் என்றார்.
அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, 13A தேவையில்லாத ஒன்றுஎன்றும் தெரிவித்திருந்தார்..