மீட்டர் வாசிப்பு (Meter Reader) மூலம் தண்ணீர் கட்டணம் வழங்கப்படும் அதே நேரத்தில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் கட்டணத்தை செலுத்தும் முறை மார்ச் 1ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அச்சிடப்பட்ட குடிநீர் கட்டணங்களுக்குப் பதிலாக இ-பில்களை வழங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் வர்த்தக – பியல் பத்மநாத் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து நீர் நுகர்வோருக்கும் அச்சிடப்பட்ட குடிநீர் கட்டணத்திற்கு பதிலாக இ-பில் வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.