உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (24) காலை கூடி தீர்மானித்துள்ளது.
இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் இல்லாத விடயங்கள் காரணமாக, மார்ச் 09ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அன்றைய தினம் நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தீர்மானித்துள்ளது.
இந்தக் கலந்துரையாடலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா அதன் உறுப்பினர்களான எஸ்.பி. திவரத்ன, எம். எம். முகமது மற்றும் கே. பி. பி. பத்திரன ஆகியோர் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.