சீனா இலங்கையின் முக்கியமான நண்பன் என்றும், சர்வதேச அரங்கில் இலங்கையின் பாதுகாப்பிற்காக முன்னிற்போர் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
“சீனா எமக்கு மிகவும் முக்கியமானது, அவர்கள் எமது வரலாற்று நண்பர், எமது பாதுகாப்பிற்காக சர்வதேச சமூகத்தில் நமக்காக நின்றார்கள், யுத்தத்தின் இறுதியில் ஆயுதங்களை வழங்கி, ஒரு பெரும் பயங்கரவாதியை உருவாகுவதை தவிர்க்க வழிவகுத்தனர். நாம் அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.”