சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பழ வகைகளின் விலை தற்பொழுது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் அப்பிள், தோடம்பழ வகைகள், உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு சந்தையில், இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வர்த்தகர்களால் விநியோகிக்கப்படும் வாழைப்பழம், பப்பாளி, மற்றும் அன்னாசி ஆகிய பழங்களுக்கான விலை குறைவடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.