follow the truth

follow the truth

November, 25, 2024
Homeஉள்நாடுமின்சாரம் மற்றும் எண்ணெய் மறுசீரமைப்பை விரைவுபடுத்த ஆலோசனை

மின்சாரம் மற்றும் எண்ணெய் மறுசீரமைப்பை விரைவுபடுத்த ஆலோசனை

Published on

இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

எண்ணெய் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சார சபையும் புதிய முறையின் கீழ் இலாபம் ஈட்டுவதற்கு தேவையான பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், உத்தேச மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு பணிகளை முன்னரே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், நடைமுறைகளை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், மறுசீரமைப்பு பணிகளும் தாமதமானது.

மறுசீரமைப்புச் செயற்பாட்டின் ஊடாக இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை பல பகுதிகளாகப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தச் செயற்பாட்டின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளது மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், புதிய நிறுவனங்களுக்கு புதிய செயல்முறை மூலம் எண்ணெய் இறக்குமதி செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நவம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

நவம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

24 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்கள் மற்றும் தரைப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை(26) மாலை...

சீரற்ற காலநிலை – உயர்தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அருகிலுள்ள பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்கு தோற்ற...