நாட்டின் 75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் குடியரசு பெரஹெரா இன்று (19) பிற்பகல் வீதி உலா வரவுள்ளது.
ஊர்வலமானது கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து மாலை 06.30 மணிக்கு வீதி உலா ஆரம்பமாகி தலதா வீதி, யட்டி கண்டி வீதி, ராஜா வீதி வழியாக பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா நாயக்க தேரர்களின் ஆலோசனையின் பேரில் ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேகளும், சதர மகா தேவாலய நிலமேகளும் இணைந்து ஊர்வலமொன்றை நடத்துகின்றனர்.
தூதர்கள், உயர்ஸ்தானிகர்கள் உட்பட உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலத்தை காண உள்ளனர்.
ஊர்வலம் காரணமாக இன்று பிற்பகல் கண்டியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் மற்றும் போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்க தெரிவித்தார்.