Homeஉள்ளூர்வத்தளை கடற்கரை பகுதியில் ஆணொருவர் சடலமாக மீட்பு

வத்தளை கடற்கரை பகுதியில் ஆணொருவர் சடலமாக மீட்பு

வத்தளை, உஸ்வெட்டகெய்யாவ, மோர்கன்வத்த பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதியில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் நேற்று வியாழக்கிழமை (20) இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமானது இன்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular