எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக விநியோகஸ்தர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கணக்கை மக்கள் வங்கி இடைநிறுத்தியுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு முதல் இந்தக் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கம் கூறுகிறது.
தற்போதைய சூழ்நிலை காரணமாக பணம் செலுத்திய விநியோகஸ்தர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் எண்ணெய் கூட்டுத்தாபனத்துடனும், மக்கள் வங்கியுடனும் கலந்துரையாடி தீர்வினை பெற்று வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
மக்கள் வங்கியின் கணக்கில் பணத்தை வைப்பிலிடும் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விடுவிக்கப்படாது என எண்ணெய் கூட்டுத்தாபனம் சில பகுதிகளில் உள்ள விநியோகஸ்தர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.