இலங்கையில் மீண்டும் அபிவிருத்தி செய்யப்பட்ட ரதல்ல கிரிக்கெட் மைதானம் சர்வதேச மட்ட கிரிக்கெட் பயிற்சிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் இலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான பயிற்சிக்காக இந்த மைதானம் பயன்படுத்தப்படும் என கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மைதானத்தில் நாளை (16) பயிற்சியை ஆரம்பிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக ஒருவாரம் இங்கு பயிற்சியில் ஈடுபடவுள்ளது.