follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் மீது தாக்குதல்

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் மீது தாக்குதல்

Published on

தெமட்டகொட ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் மீது இன்று (15) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் கூறுகையில், பலர் உள்ளே புகுந்து அலுவலகத்தில் இருந்த விளம்பர பலகைகளை கடுமையாக சேதப்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை மிரட்டி அலுவலகங்களை அழிப்பதற்காக குழுக்களை களமிறக்குவதன் மூலம் ஜனாதிபதி புதிய கலாசாரத்தை உருவாக்கியுள்ளதாகவும் முஜிபர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகையை எரித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுக்க ஜனாதிபதியின் ஆசியுடன் கண்ணுக்குத் தெரியாத சக்திகள் வந்து செயற்படுகின்றன என்பது எமக்குத் தெளிவாகத் தெரிகிறது. எனவே, நகர வரலாற்றில் வன்முறைகள் இடம்பெற்றதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எந்தவொரு அரசாங்கமும் ஆட்சியில் இருந்தபோதும் அரசியல் விளையாடி எவரும் துன்புறுத்தப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் கொழும்பில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் கூட்டுக்குழுக்களை உருவாக்கி ஐக்கிய மக்கள் சக்தியின் இயக்கத்தை தடுக்க முயற்சித்தனர்….”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...