அரசாங்கத்தின் வரி திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள், தொழிற்சங்கங்கள் இன்று(13) ஒன்றுகூடி தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளன.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக பேராசிரியர்களின் தொழிற்சங்க சம்மேளனம், மருத்துவ பேராசிரியர்களின் தொழிற்சங்க சம்மேளனம், மின் பொறியியலாளர்களின் சங்கம், இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் இன்று கலந்துரையாடவுள்ளன