இந்தோ-ஆஸ்திரேலிய டெக்டோனிக் பிளேட்டின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் இலங்கையில், மேலும் பல சிறு அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகலாம் என மூத்த பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புத்தல பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கம் இந்திய-அவுஸ்திரேலிய தட்டு உடைந்ததால் ஏற்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தினால் உயிர்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை எனவும் பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையம், கேட்டுக்கொண்டுள்ளது.