ஜப்பானிய வர்த்தக துறையில் மாபெரும் நிறுவனமான மிட்சுபிஷி (Mitsubishi) இலங்கையில் தனது செயற்பாடுகளை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவு செய்ய தீர்மானித்துள்ளது.
60 வருடங்களின் பின்னர் Mitsubishi தனது நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் வெளிநாட்டுக் கடனைத் தற்காலிகமாக நிறுத்தியமை, இலகு ரயில் திட்டம் போன்றவை பாதகமான சர்வதேச மதிப்பீடுகள் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டம் ஆகிய காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Mitsubishiயின் கொழும்பு அலுவலகத்தை மார்ச் 31ஆம் திகதி மூடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தனியார் துறையினருக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்ததுள்ளன.