follow the truth

follow the truth

January, 13, 2025
Homeஉள்நாடுஅதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசு தீர்மானம்

அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசு தீர்மானம்

Published on

அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது.

திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ அலகுகளை மீளாய்வு செய்வதற்கான குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சின் செயலாளர் எச்.டி. கமல் பத்மசிறி தலைமையில் ஜனாதிபதியினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 32 திட்ட அலுவலகங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

46 திட்ட அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களின் கீழ் இயங்க வேண்டும் என்றும் இது தொடர்பான குழு அறிக்கை பரிந்துரைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் அமைச்சர்களின் கோரிக்கைக்கு அமைய 55 அலுவலகங்களும் மூடப்படுமா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தனது இணக்கத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி குழு அறிக்கை எதிர்காலத்தில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடப்படும்.

பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்காக பல அபிவிருத்தி திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட மேலாண்மை அலகுகள் நிறுவப்பட்டுள்ளன.

அந்த அலுவலகங்களில் ஆலோசகர்கள் உட்பட பாரியளவிலான ஊழியர்கள் உயர் சம்பள மட்டங்களுக்கு அமைய உள்வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்து பாரிய திட்ட அலுவலகங்களை பராமரிக்க முடியாத நிலையில், குழுவொன்றை நியமித்து அந்த திட்ட அலுவலகங்களை மதிப்பீடு செய்ய ஜனாதிபதி அண்மையில் தீர்மானித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதியாகும் வாகனங்களின் மொத்த வரி 500 சதவீதம் வரை அதிகரிக்கும் சத்தியம்

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய, வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான மொத்த...

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை...

ஹஜ் யாத்திரை -2025 : இலங்கை சவூதி ஒப்பந்தம் கைச்சாத்து

கடந்த 11ம் திகதி அன்று சவுதி அரேபியாவின் ஜித்தாவில் 2025 ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. புத்தசாசன, மத...