இரசாயனவியலுக்கான நோபல் பரிசு, சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டொக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.
ஜேர்மனி நாட்டின் பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்காவின் டேவிட் மெக்மிலன் ஆகியோருக்கு பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக பரிசுக்குழு அறிவித்துள்ளது.
சமச்சீரற்ற சேதன வினையூக்கி வளர்ச்சிக்காகவே இந்த பரிசு வழங்கப்படுகிறது.