follow the truth

follow the truth

January, 21, 2025
Homeவிளையாட்டு2024 ஒலிம்பிக் போட்டிகளை 40 நாடுகள் புறக்கணிக்கக்கூடும்

2024 ஒலிம்பிக் போட்டிகளை 40 நாடுகள் புறக்கணிக்கக்கூடும்

Published on

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளை 40 நாடுகள் புறக்கணிக்கக்கூடும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய, பெலாரஸ் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டால், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பதாக உக்ரைன் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிவிப்பை போலந்து, லித்துவேனியா, எஸ்டோனியா, லட்வியா ஆகிய நாடுகள் கூட்டாக நிராகரித்துள்ளன.

இதனையடுத்து, சுமார் 40 நாடுகள் வரை ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கக்கூடும் எனவும் அவ்வாறு இடம்பெற்றால், ஒலிம்பிக் நிகழ்வுகள் அர்த்தமற்றதாகும் எனவும் போலந்தின் விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கு முன்னர் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் திட்டங்களைத் தடுப்பதற்கு ஆதரவளிக்க பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட 40 நாடுகளின் கூட்டணியை உருவாக்க முடியும் என நம்புவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அது வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும் – சாம்பியன்ஸ் டிராபி குறித்து ரோஹித்

எட்டு அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (பெப்ரவரி) 19ம் திகதி...

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு பிடியாணை

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வழக்கு ஒன்றில்...

இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து ஸ்மித் விலகல்

இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீபன் ஸ்மித் விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த...