வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை நாளை (07) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கோரிக்கைக்கு அமைய, நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .
தடுப்பூசி ஏற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள திகதி மற்றும் நேரத்தில் மாத்திரம் வைத்தியசாலைக்கு வருகை தருமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.