“Slave Island” என்ற ஆங்கிலப் பெயரை உடனடியாக ‘கொம்பன்ன வீதிய’ என மாற்றுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தெரிவித்தார்.
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பெயரை மாற்ற முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
“Slave Island” (ஸ்லேவ் ஐலண்ட்) என்ற ஆங்கில பதம், மூன்று மொழிகளில் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) உச்சரிக்க வசதியாக மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அஞ்சல்மா அதிபர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.