உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சதி மற்றும் உதவிய குற்றச்சாட்டில் நௌபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (01) கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தமித் தொடவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது..
சட்டமா அதிபரிடம் இருந்து வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களை பெற்றுக்கொள்ளுமாறும் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளுக்கு நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.