உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்துண்டிப்பை அமுல்படுத்த வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரையில், மின் துண்டிப்பை தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினும் உயர் நீதிமன்றில் இன்று அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்தார்.