புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பான சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இலங்கை வசமுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு மூலங்களைப் பயன்படுத்தி, கனிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை நாட்டில் ஆரம்பிப்பதற்கு அவசியமான சட்ட பின்னணி மற்றும் கட்டுப்பாட்டு பொறிமுறையை தயாரிப்பதற்கும், இதனூடாகக் கனிய எண்ணெய் துறையில் பாரிய முதலீட்டை இலங்கையின் கனிய எண்ணெய் வள ஆய்விற்காக ஈர்ப்பதற்கும் புதிய சட்டமூலத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சின் காரியாலயம் தெரிவித்துள்ளது.