மக்களின் நம்பிக்கை மீண்டும் உயரும் போது 8000 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கும் நிலையை எதிர்கட்சி எதிர்பார்த்தால் நாடு மீண்டும் பொருளாதார பாதாளத்தில் விழுவதுடன் சுற்றுலாத்துறையும் பாதிக்கப்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
மேலும், வாகனக் குத்தகை, வங்கிக் கடனைச் செலுத்த முடியாதவர்கள் எதிர்காலத்தில் இக்கட்டான காலத்தை சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்த வஜிர அபேவர்தன, இவற்றில் எதிலுமே கவனம் செலுத்தாவிடின் எதிர்கட்சிகள் சார்பாக நின்றால், தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
தேர்தலுக்காக மாத்திரம் சுமார் 20 பில்லியன் செலவிடப்படும் எனவும், தெரிவு செய்யப்பட்ட 8000 உறுப்பினர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு மற்றும் சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இது சாத்தியமில்லை எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஹினிதும மற்றும் எல்பிட்டிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.