பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்கவை மீண்டும் நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக 2014 முதல் 2017 வரை பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய இவர், பின்னர் இலங்கை தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பதவி வகித்துள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் சந்திக ஹதுருசிங்கவின் நியமனம் குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்காவிட்டாலும், பெப்ரவரி 18-20 ஆம் திகதிக்குள் புதிய பயிற்சியாளர் பெயரிடப்படும் என தெரிவித்துள்ளது.
இதேவேளை, நியூ சவுத் வேல்ஸின் உதவி பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து சந்திக ஹத்துருசிங்க இராஜினாமா செய்துள்ளதாக கிரிக்கெட் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி சந்திக ஹதுருசிங்கவின் கீழ் தெளிவான மாற்றத்தை சந்தித்ததுடன், இதன் காரணமாக ஹத்துருசிங்கவின் பயிற்சியாளர் மீது உலகின் கவனம் குவிந்தது.
பின்னர், இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக அவர் பொறுப்பேற்றார், ஆனால் அதில் குறிப்பிடத்தக்க பலன் எதுவும் காணவில்லை என்பது விமர்சனமாகும்.