follow the truth

follow the truth

March, 15, 2025
Homeஉள்நாடுஇன்றும் ரயில் பயணங்கள் இரத்தாகலாம்

இன்றும் ரயில் பயணங்கள் இரத்தாகலாம்

Published on

ரயில்களை இயக்க தேவையான பணியாளர்கள் இல்லாததால் கடந்த நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 153 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த டிசெம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள், சாரதி உதவியாளர்கள் எனப் பலர் ஓய்வு பெற்றதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலைமை காரணமாக 30 ரயில் பயணங்களை இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், பின்னர் அந்த உத்தியோகபூர்வ அறிவிப்பை ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகரே இரத்து செய்தார்.

இவ்வாறான சூழ்நிலைக்கு மத்தியில் கடந்த நான்கு நாட்களாக பெரும்பாலான ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

கடந்த 28ஆம் திகதி 27 பயணிகள் ரயில்கள் மற்றும் 09 எண்ணெய் மற்றும் சரக்கு ரயில்கள் என 36 ரயில் பயணங்கள், கடந்த 29ம் திகதி 29 பயணிகள் ரயில்களும், 15 எண்ணெய் மற்றும் சரக்கு ரயில்களும் 44 ரயில் பயணங்கள், 30ம் திகதி 36 பயணிகள் ரயில்களும், 7 எண்ணெய் மற்றும் சரக்கு ரயில்கள் 43 ரயில் பயணங்களும் நேற்று 31ம் திகதி 22 பயணிகள் ரயில்கள் மற்றும் 08 எண்ணெய் மற்றும் சரக்கு ரயில்கள் 30 இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலை காரணமாக பயணிகள் ரயில்கள் அதிக அழுத்தத்தில் பயணிப்பதை இலகுவாக்க வேண்டியுள்ளதுடன், புகையிரத கதவுகளில் பயணித்தமையினால் 3 விபத்துக்களும் பதிவாகியுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு சகோதரர்கள் கொலை

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகொடெல்ல பகுதியில் இன்று (15) காலை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் இரு...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 1,500 ரூபா இலஞ்சம் பெற்றமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அடிப்பல பிரதேசத்தைச் சேர்ந்த...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான...