இலங்கையின் முதன்மை பணவீக்க விகிதம் ஜனவரியில் 54.2% ஆக குறைந்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக டிசம்பரில் முதன்மை பணவீக்கம் 57.2% ஆக பதிவாகியிருந்தது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, டிசம்பவரில் 64.4% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் 60.1% ஆக குறைந்துள்ளது.
அவ்வாறே, உணவு அல்லாத வகை பணவீக்கம் 51% ஆகவும் பிரதிபலித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
“எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பணவீக்கம் குறைகிறது. மின்சார விலையில் அதிகரிப்பு இல்லை என்றால், அடுத்த மாதம் பணவீக்கம் 51.9% ஆகவும் மார்ச் மாதத்திற்குள் 50% க்கும் குறைவாகவும் இருக்கும்” என்று கொழும்பை தளமாகக் கொண்ட முதலீட்டு நிறுவனமான ஃபர்ஸ்ட் கெப்பிட்டலின் ஆய்வாளர் டிமந்த மெத்யூ கூறினார்.