நியாயமற்ற வரி விதிப்பை நிறுத்துவதற்கு இந்த வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்த வாரம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இன்று (31) கலந்துரையாடல் கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக அந்த சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
துறைமுகத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் நாளை ஒன்று கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தொழில் வல்லுனர்களின் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் நிரோஷன் கோரகனகே தெரிவித்தார்.